சமூக வலைத்தள வலையில் சிக்கிய சிறுவர்கள் – கண்டி, பேராதனையில் அதிர்ச்சி சம்பவம்!

கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் சிறுவர்களை அச்சுறுத்தி தவறான முறையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
சமூக வலைத்தள வலையில் சிக்கிய சிறுவர்கள் – கண்டி, பேராதனையில் அதிர்ச்சி சம்பவம்!

கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் சிறுவர்களை அச்சுறுத்தி தவறான முறையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த சம்பவத்தில் 36 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்டியைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பேராதனை பகுதியில் தேங்காய் எண்ணெய் வியாபாரம் செய்து வந்த பிரதான சந்தேகநபரும், பொறியியலாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளில், சந்தேகநபர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் சிறுவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, மேலதிக வகுப்புகளை இலக்காகக் கொண்டு செயல்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சிறுவர்களை அச்சுறுத்தி தவறான செயல்களில் ஈடுபடுத்தியதோடு, அவற்றை இரகசியமாக பதிவு செய்து, அந்த பதிவுகளை வெளியிடுவதாக மிரட்டி தொடர்ந்து பல இடங்களில் வைத்து தவறாக பயன்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் மேலும் ஐந்து பேர் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதால், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மற்ற சிறுவர்கள் தொடர்பான தகவல்களையும் கண்டறிய காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர