Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுவாக்குமூலம் வழங்க கறுவாத்தோட்ட பொலிஸில் ஆஜரான திருமதி உலக அழகி
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

வாக்குமூலம் வழங்க கறுவாத்தோட்ட பொலிஸில் ஆஜரான திருமதி உலக அழகி

வாக்குமூலம் வழங்குவதற்காக திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி, கறுவாத்தோட்டம் காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.

திருமதி இலங்கை போட்டியில் முடிசூட்டப்பட்ட புஷ்பிகா டி சில்வா கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கரோலின் ஜூரி அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான ‘திருமதி சிறிலங்கா’ அழகிப் போட்டி நிகழ்ச்சியில் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக திருமதி உலக அழகி போட்டியின் ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் (04) திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளருக்கு வழங்கப்பட்ட மகுடம் சில நொடிகளில் பறிக்கப்பட்டுள்ள மற்றுமொருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் திருமதி புஷ்பிகா டி சில்வா, வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது, போட்டியில் பங்குப்பற்றுபவர்கள் திருமணமானராக இருக்க வேண்டும் என்றும் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என விதிமுறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகுடம் சூட்டப்பட்ட திருமதி புஷ்பிகா டி சில்வா, ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர் என்றும் இதனால் போட்டியில் வெற்றி பெற தகுதியற்றவர் என மீண்டும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, திருமதி புஷ்பிகா டி சில்வாவுக்கு சூட்டப்பட்ட மகுடம், மேடையிலேயே மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டாவது இடத்தை பெற்ற திருமதி ருவந்திக்கு சூட்டப்பட்டது.

இந்த நிலையில், புஸ்பிகா விவகாரத்தானவர் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இதனால் அவருக்கே இந்த பட்டத்தை இன்று(06) மீள வழங்க தீர்மானித்ததாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.