தங்கம் விலையானது ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் தங்கம் விலையானது நேற்று ஒரு சவரன் ரூ.66,720-க்கு விற்பனையாகி உதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் தங்கம் விலையானது இன்றும் உயர்ந்தே காணப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8340-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.66,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ.20 அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8360-க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ66,880-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.113க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது