புலம்பெயர்தலை கட்டுப்படுத்த பிரித்தானியாவின் புதிய ஒப்பந்தம்
இவ்வாறான சர்வதேச ஒத்துழைப்பு, சட்டவிரோத புலம்பெயர்தலை கட்டுப்படுத்தவும், மனிதக் கடத்தலை தடுப்பதற்கும் முக்கியமாகும் என குறிப்பிடப்படுகிறது.
புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதே தொடர்ச்சியாக, தற்போது பிரித்தானியா மற்றும் கிரீஸ் ஆகியன புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தை பிரித்தானிய வெளியுறவு அமைச்சரான யுவெட் கூப்பர் (Yvette Cooper) மற்றும் கிரீஸ் வெளியுறவு அமைச்சரான ஜோர்ஜ் ஜெராப்பெட்ரிடிஸ் (George Gerapetritis), கிரீஸ் தலைநகரான ஏதென்ஸ் நகரில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் கடத்தல் கும்பல்களை எதிர்கொள்ள உதவும் என்றும், ஆங்கிலக் கால்வாயை கடக்க பயன்படுத்தப்படும் சிறிய படகுகள் விநியோகத்தை தடுக்கும் விதமாக கிரீஸ் அதிகாரிகளுக்கு பிரித்தானியா பயிற்சியையும் வழங்கும் என யுவெட் கூப்பர் கூறினார்.
இவ்வாறான சர்வதேச ஒத்துழைப்பு, சட்டவிரோத புலம்பெயர்தலை கட்டுப்படுத்தவும், மனிதக் கடத்தலை தடுப்பதற்கும் முக்கியமாகும் என குறிப்பிடப்படுகிறது.
Editorial Staff