வவுனியாவில், தீயில் எரிந்து குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை (14) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – கற்பகபுரம், நான்காம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் கூரை மற்றும் ஜன்னல் துவாரம் ஊடாக நெருப்பு மற்றும் புகை என்பன வெளிவந்ததைத் தொடர்ந்து, அயலவர்கள் சென்ற பார்த்துள்ளனர்.
இதன்போது, வீட்டின் அறைப் பகுதியில் குறித்த வீட்டில் வசித்து வந்த பெண் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து, அயலவர்கள் கதவை உடைத்து, தண்ணீர் விசிறி தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.
இருப்பினும் குறித்த பெண் முற்றாக தீயில் எரிந்து மரணமடைந்துள்ளதுடன், அறை ஒன்றும் முழுமையாக எரிந்து உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில், பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.