2026 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? – பாபா வங்கா வெளியிட்டுள்ள அதிரடி கணிப்புகள்!

பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு குறித்தும் சில கணிப்புகளை முன்வைத்துள்ளார். அவை இன்றைய உலக நிகழ்வுகளுடன் பயங்கரமான இணைப்புகளைக் கொண்டுள்ளதாக பலர் கருதுகின்றனர்.

2026 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? – பாபா வங்கா வெளியிட்டுள்ள அதிரடி கணிப்புகள்!

இளவரசி டயானாவின் மரணம் முதல் கொரோனா பெருந்தொற்று வரையான பல முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்ததாக நம்பப்படும் புகழ்பெற்ற காலஞ்சொல்லி பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு குறித்தும் சில கணிப்புகளை முன்வைத்துள்ளார். அவை இன்றைய உலக நிகழ்வுகளுடன் பயங்கரமான இணைப்புகளைக் கொண்டுள்ளதாக பலர் கருதுகின்றனர்.

பாபா வங்காவின் கணிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டு போர்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். குறிப்பாக, ஐரோப்பாவில் போர்கள் வெடிக்கும் எனவும், அவை வழக்கமான இராணுவ மோதல்களுக்கு அப்பால் சென்று, நீண்டகால புவி அரசியல் பிளவுகளை உருவாக்கி, உலக நாடுகளின் கூட்டணிகளையும் மாற்றக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கணிப்பு, தைவான், தெற்கு சீனக்கடல், மற்றும் இந்திய-சீன எல்லை பதற்றங்கள் போன்ற தற்போதைய சூழல்களுடன் ஒத்துப்போவதாகத் தோன்றுகிறது.

அதிக அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றொரு கணிப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பானது. பாபா, AI மனித குலத்தை மேற்கொள்ளும் அல்லது கட்டுப்படுத்தும் என எச்சரித்துள்ளார். அதாவது, ரோபோக்கள் மனிதர்களின் வேலைகளைப் பறிக்கும், உறவுகளை சிதைக்கும், சில சந்தர்ப்பங்களில் உயிரையும் பறிக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

மிகவும் வியப்பூட்டக்கூடிய மற்றொரு கணிப்பு – 2026 நவம்பரில், உலகம் முதன்முறையாக ஏலியன்களுடன் தொடர்பு கொள்ளும் என்பது. அவரது கூற்றுப்படி, ஒரு பெரிய விண்வெளிக் கப்பல் பூமியை நோக்கி வந்து, நம்முடன் தொடர்பு கொள்ளும். இது வெறும் கற்பனையாக மட்டும் தோன்றவில்லை – ஏனெனில், 3I/ATLAS என்ற ஒரு மர்மமான வான்பொருள் பூமியை நோக்கி வருவதாக அறிவியலாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

மேலும், இயற்கை பேரழிவுகள் குறித்தும் பாபா கணித்துள்ளார். உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், மற்றும் அதிதீவிர காலநிலை மாற்றங்கள் ஏற்படும் எனவும், இதன் காரணமாக பூமியின் 7 முதல் 8 சதவீத பரப்பு சேதமடையக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இது சூழல் மண்டலம், உள்கட்டமைப்பு, மற்றும் மனித வாழ்க்கையின் அடிப்படை வசதிகளையும் கடுமையாக பாதிக்கும் என அவர் கருதினார்.

இறுதியாக, ரஷ்யாவிலிருந்து ஒரு தலைவர் உலகத் தலைவராக உருவெடுப்பார் என்றும் பாபா கணித்துள்ளார். பலர் இந்த கணிப்பு விளாடிமிர் புடினைக் குறிக்கலாம் என ஊகிக்கின்றனர்.

இந்தக் கணிப்புகள் உண்மையாகுமா இல்லையா என்பது எதிர்காலமே சொல்லும். ஆனால், பாபா வங்காவின் கடந்த காலக் கணிப்புகளின் துல்லியத்தைக் கருத்தில் கொண்டால், 2026 ஆம் ஆண்டு உலகின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருக்கலாம் என்பதில் ஐயமில்லை.