Homeசெய்திகள்உள்நாடுநடுக்கடலில் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்; இந்தியா மறுப்பு

நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்; இந்தியா மறுப்பு

சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிக்கச்சென்ற இலங்கை மீனவர்கள் சிலர், மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக நேற்று (17) ஊடகங்களில் வெளியான செய்தியை இந்தியா மறுத்துள்ளது.

இந்திய கடற்படை அதிகாரிகளால் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு மோசமான முறையில் தாம் தாக்கப்பட்டதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களுடன் இரண்டு படகுகள் நேற்று (17) பிற்பகல் திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், கடுமையான தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் மூவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அழைத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என, இந்திய
உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய கடற்படை மிகவும் ஒழுக்கமான மற்றும் தொழில்முறை நேர்த்தியுடன் தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi