Sri Lanka News Live and Tamil Breaking News

இன்றைய ராசிபலன் (15 ஜனவரி 2022) : Daily Horoscope, January 15

0 17

- Advertisement -

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

ரிஷப ராசியில் ராகு, மிதுனத்தில் சந்திரன், விருச்சிக ராசியில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சூரியன்,மகர ராசியில் சனி, புதன், சுக்கிரன், கும்ப ராசியில் குரு, விருச்சிகம் ராசியில் இருக்கும் விசாகம், அனுஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.

மேஷம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு பல நன்மைகள் தரக்கூடிய நல்ல நாள் ஆகும் நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் இன்று வசூலாகும் பல்வேறு சூழ்நிலைகளில் தடைபட்ட காரியங்கள் இன்று நிறைவேறும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அமைதியே நிலவும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் புதிய நண்பர்கள் கிடைக்கப் பெறுவார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் அவர்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

வெளிநாட்டில் கல்வி பயில செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது இருந்தாலும் இம் முயற்சியில் வெற்றி அடைவீர்கள் நீண்ட நாட்களாக தாமதப்பட்டு வந்த கடன் இன்று வசூலாக வாய்ப்புள்ளது.

மிதுனம் இன்றைய ராசிபலன்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்துவரும் பல நாட்களாக தாமதப்பட்டு வந்த பல காரியங்கள் இன்று நிறைவேறும் தனவரவு உண்டாகும்.

சுயதொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை மேம்படும் அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள் உறவினர்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.

கடகம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி உறவு உணர்ச்சிவசப்படக் கூடிய நிகழ்வுகள் உண்டாக வாய்ப்புள்ளது ஆகவே பொறுமையைக் அறிக்கை கொள்ளவும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் விசா தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்புள்ளது குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் சுயதொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

புதிய கடன்கள் தேவைப்படுவோருக்கு கடன்கள் உடனடியாக கிடைக்க வாய்ப்புள்ளது பிரிவை எதிர்நோக்கி இருந்த குடும்பங்களுக்கு அவர்கள் எண்ணம் நிறைவேறப் பெறுவார்கள்.

கன்னி இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாகும் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். அரசுத்துறையில் பணியாற்றும் வருபவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்துவரும்.

குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் வெளிநாடு செல்லும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாகும்.

துலாம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாகும் நீண்ட நாட்களாக வரவேண்டிய தனவரவு இன்று வசூலாக வாய்ப்புள்ளது குடும்பத்தில் அமைதி தவழும்.

கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு தொழிலில் சற்று முன்னேற்ற குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே கவனமாக இருக்கவும் சுயதொழில் செய்பவர்களுக்கு குடும்பத்தினரால் பொருளாதார உதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

எதிர்பார்த்த தனவரவு உண்டு. காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வு உண்டு விஷுவல் மீடியா மற்றும் கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு உங்கள் முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்று மதியம் வரை சந்திராஷ்டமம் உள்ளது. அதன் பின்னர் சிறப்பாக இருக்கும். அதுவரை முக்கிய விஷயங்கள் செய்ய வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது ஆகவே கோபத்தை குறைத்துக் கொண்டு குணத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் அதனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

கணவன் மனைவி ஒற்றுமை இணக்கமாக இருந்து வரும் குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் குழந்தைகள் விளையாடி மகிழ்வர் குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிகழும்.

தனுசு இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு உடல் நலத்தில் சிறிதளவு பிரச்சினை ஏற்பட்டாலும் பிறகு சரியாகிவிடும்.

குடும்பத்திலுள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவி உறவு அன்யோன்யமாக இருக்கும் புதிய நண்பர்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

மகரம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்த மகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு பொருளாதார உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. தனவரவு கூடும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் இருந்தாலும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பொறுமையாக இருக்கவும். அவர்களுக்கு உடல் நலத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும் தனவரவு உண்டாகும்.

காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு பிணக்குகள் வர வாய்ப்புண்டு என்பதால் பேச்சிலும், செயலிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். கோபத்தை குறைத்து குணத்தை கைக்கொண்டு இந்த நாள் இனிமையாக அடைப்பீர்கள்.

மீனம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும் ஒரு சிலருக்கு வாகன வகையில் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது இருந்தாலும் அதை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் சுயதொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் அதில் வெற்றியும் கிடைக்கும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More