இங்கிலாந்தில் முன்கூட்டிய குளிர்காலம்: கடும் பனி எச்சரிக்கை
இங்கிலாந்து முழுவதும் இந்த ஆண்டு குளிர்காலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே துவங்கும் என வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து முழுவதும் இந்த ஆண்டு குளிர்காலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே துவங்கும் என வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது.
வரும் வார இறுதியில் ஸ்ட்ராடோஸ்பெரிக் வெப்பமயமாதல் (Stratospheric Sudden Warming – SSW) எனப்படும் திடீர் வளிமண்டல மாற்றம் நிகழக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மாற்றம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு குளிரான மற்றும் நிலைமாறும் வானிலையை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
படைமண்டலத்தில் (Stratosphere) கீழே குளிர்ந்த காற்றும் மேலே சூடான காற்றும் இருப்பது இயல்பான அமைப்பு. ஆனால் இந்த சமநிலை திடீரென மாறும்போது, குளிர்ந்த காற்று நிலத்தடுக்கு நோக்கி விரைவாக இறங்கி, ஐரோப்பாவிலும் குறிப்பாக இங்கிலாந்திலும் கடும் குளிர் அலை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்பு அதிகரிப்பதாக வல்லுநர்கள் விளக்குகின்றனர்.
Editorial Staff