Sun, May9, 2021
Homeசெய்திகள்உள்நாடு5 மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

5 மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையை அடுத்து, நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று(04) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய 5 மாவட்டங்களின் 9 கிராம சேகர் பிரிவுகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல்ஷ வேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில், நோர்வூட் பொலிஸ் அதிகார பிரிவில், இன்ஜஸ்றி கிராம சேவகர் பிரிவும், ஹட்டன் பொலிஸ் அதிகார பிரிவில் போடைஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில், கடவத்தை பொலிஸ் அதிகார பிரிவின் எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் அதிகார பிரிவின் கங்குல்விட்டி கிராம சேவகர் பிரிவும் இறக்குவானை பொலிஸ் அதிகார பிரிவின் பொத்துபிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவும் கலவான பொலிஸ் அதிகார பிரிவலின் ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுமுல்ல பொலிஸ் அதிகார பிரிவின் வில்லோர தோட்டம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட பொலிஸ் அதிகார பிரிவின் போம்புவல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi