கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட 35 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான இணைப்புக் கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரினால் இன்று (07) வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள திருகோணமலை தலைமைக் காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் 43 வெற்றிடங்கள் காணப்பட்டிருந்தபோதிலும் 35 பேருக்கே தற்போது நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் ஊடாக அனைத்து வைத்தியசாலைகளுக்கும் வைத்தியர்களை நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.
நியமனம் பெற்றுள்ள 35 ஆயுர்வேத வைத்தியர்களும் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.