Sun, May9, 2021
Homeஇந்தியா1968ல் பிரியாணி எவ்வளவு தெரியுமா? வைரலாகும் உணவக பில் இதோ!

1968ல் பிரியாணி எவ்வளவு தெரியுமா? வைரலாகும் உணவக பில் இதோ!

இன்று மக்களுக்கு உணவு என்பது ஆரோக்கியத்தையும் கடந்து ஒரு உணர்வாக மாறிவிட்டது என்றே கூறலாம்.

அந்த வகையில் மக்கள் அதிகம் நேசிக்கும் உணவுகள் பட்டியலில் நீங்காத இடம்பிடித்திருப்பது பிரியாணி.

இன்று பிரியாணியின் விலை 50 ரூபாயில் இருந்து 20,000 ரூபாய் வரையில் உள்ளது.

ஆனால், சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பிரியாணியின் விலை என்னவாக இருந்திருக்கும் என பலரால் கணிக்கவே முடியாது.

1968ம் ஆண்டு அருப்புக்கோட்டை திருச்சுளி ரோட்டில் உள்ள தனலட்சுமி உணவகத்தில் அரை பிளேட் கறி பிரியாணியின் விலை 1 ரூபாயாகவும் கால் பிளேட் 50 பைசாவாகவும் இருந்துள்ளது.

அதே போல் அரை பிளேட் முட்டை பிரியாணியின் விலை 1 ரூபாய் 20 பைசாவாகவும் கால் பிளேட் 60 பைசாவாகவும் இருந்துள்ளது.

இந்த உணவகத்தின் பில் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi