Mon, Mar1, 2021

12 வயதில் ஆசிரியராக மாறிய சிறுமி : வீடு வீடாக பாடம் கற்பிக்கும் ஆச்சரியம்!!

எகிப்தில் கெய்ரோவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்மிடா என்று ஊரை சேர்ந்த 12 வயது சிறுமி ரீம் எல் கவ்லி.

இவர் கொரோனா முடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் வீட்டில் உள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியராக மாறியுள்ளார்.

பள்ளிக்கு செல்ல முடியாமல் உள்ள குழந்தைகளின் வீடு தேடி பாடம் நடத்தி வரும் 12வயது சிறுமியில் செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தெருக்களில் விளையாடுவதற்கு பதில் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைத்து, தினமும் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதாகவம், அரபு கணக்கு ஆங்கில பாடங்களை கற்றுத் தருவதாக கூறியுள்ளார் அந்த 12 வயது சிறுமி.

நோட்புக் மூலம் பாடம் நடத்திய சிறுமி தற்போது கரும்பலகையில் பாடம் கற்பித்து வருகிறார். இவரது சேவையை பாராட்டிய உள்ளூர் தொண்டு நிறுவனம், சிறுமிக்கு வெள்ளை போர்ட் மற்றும் மார்க்கர்களை வழங்கியுள்ளது.

இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

சிறப்பு செய்திகள்