Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடு1000 ரூபாயை நாளாந்த ஊதியமாக வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் தீர்மானம்
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

1000 ரூபாயை நாளாந்த ஊதியமாக வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் தீர்மானம்

வர்த்தமானி அறிவிப்பின் படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாயை ஊதியமாக வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாயாக நிர்ணயித்து, சமபள நிர்ணய சபை தீர்மானம் நிறைவேற்றியமைக்கு அமைய, தொழில் அமைச்சினால் அதுதொடர்பான வர்த்தமானி வெளியாக்கப்பட்டது.

இந்த வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளன.

இந்த மனுமீதான விசாரணை நேற்று முன்தினம் இடம்பெற்ற போது, குறித்த வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு நிறுவனங்கள் தரப்பில் கோரப்பட்ட போதும், அதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.

அத்துடன் இந்த மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் அடுத்த மாதம் 5ஆம் மற்றும் 17ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இந்தநிலையில் நீதிமன்றின்ற உத்தரவுக்கு அமைய, அரசாணையின் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு அறிவித்துள்ளது

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.