10 ஆயிரம் கிலோகிராம் கழிவு தேயிலையுடன் சந்தேக நபர்கள் இருவர் யக்கல பகுதியல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கம்பளையில் இருந்து கொழும்பு நோக்கி இரண்டு லொறிகளில் குறித்த கழிவு தேயிலை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த லொறிகளின் சாரதிகளை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.