Sun, Jun20, 2021
Homeசெய்திகள்உள்நாடுஷம்போ போத்தலில் கொக்கைன் கடத்தல்; தென்னாப்பிரிக்கப் பிரஜை சிக்கினார்

ஷம்போ போத்தலில் கொக்கைன் கடத்தல்; தென்னாப்பிரிக்கப் பிரஜை சிக்கினார்

6 கோடி ரூபாய் பெறுமதியான, 2 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் தென்னாப்பிரிக்க பிரஜை ஒருவர் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கென்யா – நைராபி நகரிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த நபரின் பொருள்களைப் பரிசோதிக்கும்போதே, அவரது பையில் ஷம்போ போத்தல் இரண்டில் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தப் போதைப்பொருளைப் சுங்கப்பிரிவினர் கண்டுப்பிடித்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் போதைப்பொருள் ஒழிப்புப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi