Mon, Apr19, 2021
Homeவெளிநாடுவிலங்குகளுக்கும் ஓய்வு ஊதியம்... எந்த நாட்டில் தெரியுமா?
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

விலங்குகளுக்கும் ஓய்வு ஊதியம்… எந்த நாட்டில் தெரியுமா?

காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அவைகள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் வழங்க போலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுவாக அரசு வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரசு ஓய்வூதியம் வழங்குவது உண்டு.

இது மனிதர்களுக்கு தான் அரசு இதுவரை வழங்கி வந்தது. ஆனால் போலந்து நாட்டில் எல்லைப் பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அவைகள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் வழங்க போலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுவாக நாய்கள் மற்றும் குதிரைகள் பணியில் இருக்கும்போது சிறந்த முறையில் கவனிக்கப்படுகிறது ஓய்வுக்குப் பின் இந்த நாய்கள் அல்லது குதிரைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது அவற்றை தத்தெடுக்க விரும்பும் அவர்களிடம் ஒப்படைக்கப் படுகின்றன.

பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் வேண்டுகோளின் பேரில் இதற்காக உள்துறை அமைச்சகம் ஒரு புதிய சட்டத்தை முன்மொழிந்தது.

இந்த சட்டத்தின்கீழ் நாய்கள் மற்றும் குதிரைகள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அதற்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்குவதற்கான ஓய்வூதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலந்து நாட்டின் உள்துறை அமைச்சர் மோரிஸ் கம்மின்ஸ்கி கூறுகையில், இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்றும், மேலும் இந்த திட்டமானது இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன், இந்த திட்டமானது சட்டமாக்கபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.