Mon, Apr19, 2021
Homeசெய்திகள்வடக்குவவுனியாவில் 7 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

வவுனியாவில் 7 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா – ஓமந்தை, நவ்வி பகுதியில், இன்று (09) காலை, 7 வயது சிறுவன் ஒருவன், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா நவ்வி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற ப.அபிசாந் என்ற சிறுவனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன், நேற்று (08) பிற்பகல் 2 மணியளவில், வீட்டில் இருந்து சக மாணவனின் வீட்டுக்குச் சென்று படித்து விட்டு வருவதாக தெரிவித்து சென்றுள்ளார்.

எனினும், நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாத்தை அடுத்து, பெற்றோரால் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில், நேற்றுக் காலை முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, குறித்த சிறுவன் படிப்பதற்காகச் சென்ற சக மாணவனின் வீட்டுக்குச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவ்வீட்டுக்கு அருகில் இருந்து, காணாமல் போன சிறுவனின் புத்தகபையை மீட்டனர்.

இதை தொடர்ந்து, மோப்ப நாய் சகிதம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் அடிப்படையில், அவ்வீட்டில் காணப்பட்ட கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.