Mon, Apr19, 2021
Homeவிளையாட்டுவரலாற்றை மாற்றி எழுதிய ஜயசூரியவின் அதிரடி அரைச்சதம்!
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

வரலாற்றை மாற்றி எழுதிய ஜயசூரியவின் அதிரடி அரைச்சதம்!

இன்று போல (ஏப்ரல் 7) ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை இலங்கை வீரர் சனத் ஜயசூரிய படைத்தார்.

இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலத்தின் தொடக்கமான, 1996ஆம் ஆண்டு நடந்த சிங்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 17 பந்துகளில் அரைசதம் எடுத்து ஜயசூரிய இந்த சாதனையைப் படைத்தார்.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜயசூரியவின் புகழ் உச்சத்தை தொட்ட ஆண்டு என 1996ஐ கூறலாம்.

இலங்கை அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அவர், தனது அதிரடி ஆட்டத்தால் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார்.

இந்தச் சூழலில் சிங்கப்பூரில் நடந்த சிங்கர் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தானை சந்தித்தது இலங்கை.

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் கப்டன் அர்ஜுன ரணதுங்க, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 215 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து இலங்கை அணி களம் இறங்க, முதல் ஓவரிலேயே வக்கார் யூனுஸின் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி, தான் சூப்பர் போர்மில் இருப்பதை பாகிஸ்தானுக்கு கோடிட்டு காட்டினார் சனத் ஜயசூரிய.

இதைத்தொடர்ந்து அடார் உர் ரஹ்மான் வீசிய ஒரு ஓவரில் 3 சிக்சர்கள் உட்பட 22 ரன்களைக் குவித்த ஜயசூரிய, 17வது பந்திலேயே அரைசதம் அடித்து, மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இப்போட்டியில் ஜயசூரிய 76 ரன்களைக் குவித்தபோதிலும், பாகிஸ்தானின் வலுவான பந்துவீச்சுக்கு இலங்கை அணியால் பதில் சொல்ல முடியவில்லை. 172 ரன்களில் இலங்கை அணி ஆட்டமிழக்க, சிங்கர் கோப்பையை பாகிஸ்தான் வென்றது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.