ஒன்றிணைந்த அனைத்து கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த கூட்டம் ஆரம்பமாகி உள்ளது.
இதில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கட்சி, ஈழ தமிழர் சுயாட்சிக் கழக கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் , நில ஆக்கிரமிப்புக்கள், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களை தடுப்பதற்கு எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட வுள்ளது.
இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.