Sun, May9, 2021
Homeசெய்திகள்வடக்குயாழில் உறவினர்களிடையே மோதல்; ஒருவர் உயிரிழப்பு

யாழில் உறவினர்களிடையே மோதல்; ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 32 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அல்வாய் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உறவினர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக வலுப்பெற்றுள்ளது.

இதன்போது, கூரான ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் பொலிஸார் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi