Mon, Apr19, 2021
Homeதலைப்பு செய்தியாழில் இரவு தூங்குவதற்காக சென்ற நபர் சடலமாக மீட்பு
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

யாழில் இரவு தூங்குவதற்காக சென்ற நபர் சடலமாக மீட்பு

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸார் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு தூக்கத்திற்கு சென்ற குடும்பஸ்தரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நேற்றைய தினம் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் தூக்கத்திற்கு சென்றதாகவும், காலையில் நீண்ட நேரமாக தூக்கத்தில் இருந்து அவர் எழுந்திருக்காமையினால் உறவினர்கள் அவரை எழுப்ப முற்பட்டுள்ளனர்.

இதன்போதே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கந்தசாமி ஜெயராசா (வயது 54) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தினை பிறப்பிடமாக கொண்டு அராலி மேற்கில் வசிக்கும் பெண் ஒருவரை திருமணம் செய்து வசித்து வந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.