மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு, இன்று (28) முதல் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி வரை 11 கொவிட் 19 சோதனை சாவடிகளில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுமென, பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நீண்ட நாட்கள் கொண்டதான விடுமுறை வருகின்றமையால் மேல் மாகாணத்தில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படும். இவ்வாறான நிலைமையினால் 11 சோதனை சாவடிகளில் கொவிட் பரிசோதனை செய்யப்படுமென அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் உள்ளேயும் வெளி மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாணத்தில் நாளாந்தம் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றமையாலேயே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Seithi News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது செய்தி ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Seithi Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
Tamil News from Seithi Tamil
| Tamil Nadu News in Tamil | Business News in Tamil | Sri Lanka News in Tamil | World News in Tamil | cinema News in Tamil | Sports News in Tamil | Astrology in Tamil