நாட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 93,690 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்றைய தினம் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பணிமனையின் நாளாந்த அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,708 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.