Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுமாணவியை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி சக மாணவர்கள்
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி சக மாணவர்கள்

15 வயதான மாணவியை துஷ்பிரயோகம் செய்த சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெக்கிராவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றி, தரம் 10 இல் மாணவியுடன் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி அதே வகுப்பிலுள்ள இன்னொரு மாணவருடன் பேசி வரும் நிலையில் அதை இரகசியமாக வீடியோ எடுத்த மாணவர்கள் மாணவியை மிரட்டியுள்ளனர்.

அதோடு தாம் சொல்வதை போல நடக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் வீடியோவை வீட்டிற்கு காண்பிப்போம் எனவும் மாணவியை மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த குறித்த மாணவி, தனது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வருகின்றார். இந்த விடயம் சகோதரிக்கு தெரிந்து விடக்கூடாது என்ற அச்சத்தில், மாணவர்களின் சொற்படி மாணவி செயற்பட்டுள்ளார்.

இதனை சாதகமாக பயன் படுத்திய அந்த மாணவர்கள் மாணவியை தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று தவறான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த மாணவியின் சகோதரி, கெக்கிராவ பொலிஸின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து மாணவர்கள் இருவர் கடந்த 25ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பதிக்கப்பட்ட சிறுமி கெக்கிராவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றம், மாணவர்கள் இருவரையும் அநுராதபுரம் சிறுவர் இல்லத்தின் தங்க வைக்க உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், வரும் 31ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்படுக்கின்றது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.