Sun, Jun20, 2021
Homeசெய்திகள்வடக்குமன்னார் வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு

மன்னார் வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில், குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் செந்தூர் பதிராஜா, குருதி வழங்க முன் வருபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குருதி வழங்க விரும்புபவர்கள், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடனோ அல்லது 023-2222261/ 023-2222349 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பை ஏற்படுத்தி, குருதி வழங்க முடியும் என்றும், அவர் கூறினார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi