Sun, May9, 2021
Homeதலைப்பு செய்திமனிதகுலத்தின் புதிய சாதனை; செவ்வாயில் பறந்த நாசாவின் குட்டி ஹெலிகாப்டர்!

மனிதகுலத்தின் புதிய சாதனை; செவ்வாயில் பறந்த நாசாவின் குட்டி ஹெலிகாப்டர்!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கிய குட்டி ரக ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்க வைத்து அரிய சாதனை படைத்துள்ளது.

இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி, பூமியைத் தாண்டி வேற்று கிரகத்தில் பறந்ததில்லை என்ற நிலையை மாற்றி நாசா வரலாறு படைத்துள்ளது.

விடாமுயற்சி என்று பொருள்படும் பெர்சிவரன்ஸ் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நாசா தரையிறக்கியது.

அதில் உள்ள ஒரு கிலோ 800 கிராம் எடையுள்ள இன்ஜெனியூட்டி என்ற குட்டி ஹெலிகாப்டர் கடந்த ஜூலை மாதம் விண்கலத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டது.

இந்நிலையில் பூமியில் இருந்து ஜாய்ஸ்டிக் உதவியுடன் செவ்வாய் கிரகத்தில் உள்ள இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் பூமியின் நேரப்படி நேற்று இயக்கப்பட்டது.

வெற்றிகரமாக ஹெலிகாப்டர் 30 விநாடிகள் வரை பறந்ததை நாசா விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi