Sun, May9, 2021
Homeசெய்திகள்மலையகம்போடைஸ் பகுதியில் வெள்ளம்; 50 குடும்பங்கள் பாதிப்பு

போடைஸ் பகுதியில் வெள்ளம்; 50 குடும்பங்கள் பாதிப்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர்.

இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு ஹட்டன் – டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி இன்று மாலை நீரில் மூழ்கியது.

இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
(க.கிஷாந்தன்)

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi