Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுபொன்சேகாவுக்கு சமல் சவால்... ஒத்திவைக்கப்பட்ட சபை மீண்டும் ஆரம்பம்
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

பொன்சேகாவுக்கு சமல் சவால்… ஒத்திவைக்கப்பட்ட சபை மீண்டும் ஆரம்பம்

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஆளும்கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

பதற்றமான நிலைமையில், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சியின் எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்ற

“2010 மற்றும் 2015 க்கு இடையில் நான் அன்றைய அரசாங்கத்தால் அநியாயமாக நடத்தப்பட்டேன்” எனத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தனக்கு விதிக்கப்பட்ட தேவையற்ற தண்டனையைத் தொடர்ந்து தன்னை பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீடு செய்திருந்தேன் என்றார்.

இதன்போது கடுமையாக கோபமடைந்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, “பொன்சேகா முடிந்தால் வெளியே வரவும்” என சவால் விடுத்தார்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது, பதாதைகளை எதிரணியினர் ஏந்தியிருந்தனர். அத்துடன்,​ கைகளிலும் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்தனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.