Sun, Jun20, 2021
Homeஇந்தியாபேய் ஓட்டுவதாக பெண்களுக்கு சாட்டை அடி… சிக்கினார் போலி சாமியார்

பேய் ஓட்டுவதாக பெண்களுக்கு சாட்டை அடி… சிக்கினார் போலி சாமியார்

நாமக்கல் அருகே பேய் ஓட்டுவதாக பெண்ணை சாட்டையால் அடித்தும், கன்னத்தில் அறைந்தும் துன்புறுத்திய போலி சாமியாரை பொலிஸார் கைதுசெய்தனர்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அடுத்த பொம்மம்பட்டி கம்மாளமேடு பகுதியில் கருப்பணார் சுவாமி கோவில் உள்ளது. இங்கு காதப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அனில்குமார் (50) பூசாரியாக இருந்து வருகிறார்.

மேலும், கோவிலில் ஆசிரமம் போன்று அமைத்து பொதுமக்களுக்கு குறிசொல்வது, பேய் ஓட்டுவது உள்ளிட்டவற்றையும் அனில்குமார் செய்து வருகிறார்.

இந்த நிலையில், பெண்களுக்கு பேய் ஓட்டுவதை வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.

விளம்பர நோக்கில் பதிவேற்றிய அந்த வீடியோவில், மது அருந்தியபடி பேய் ஓட்டுவதாக பெண்களை சாட்டை, கம்பி உள்ளிட்டற்றினாலும், கன்னத்திலும் அறைவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.இது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தபட்ட சாமியார் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த வீடியோ தொடர்பாக, காதப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் வேலகவுண்டன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் அனில்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi