இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார்.
காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் நரேந்திர மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய வழித்தடங்களில் இன்று காலை முதல் மதியம் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.