Sun, May9, 2021
Homeதலைப்பு செய்திநுவரெலியா மாவட்டத்தில் ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் இன்று (03) மாத்திரம் 104 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஹட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும், டிக்கோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனை, கந்தபளை, நோர்வூட், லிந்துலை மற்றும் ராகலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கடந்தாண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல் நேற்று வரை நுவரெலியா மாவட்டத்தில் 1,684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi