Mon, Apr19, 2021
Homeஇந்தியாநிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்.!!
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்.!!

தமிழகத்தில் நேற்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இதில் தமிழகத்தில் உள்ள அரசியல் பிரபலங்கள், திரைப்பட பிரபலங்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
தமிழகத்தில் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்.

விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து வாக்களிப்பார்கள் என கூறினார். இதை தொடர்ந்து பிற்பகலில் விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் வந்து வாக்களித்து சென்றனர்.

அப்போது விஜயகாந்த் மாலையில் வந்து வாக்களிப்பார் என் விஜய் பிரபாகரன் கூறினார். அதனால், விஜயகாந்தின் வருகையை தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார் என விஜயகாந்த் நிச்சயமாக வருவார் என தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால் வாக்குப்பதிவு நிறைவடையும் 7 மணி வரையிலும், விஜயகாந்த் அங்கு வரவில்லை. இதனால் அங்கு காத்திருந்த தேமுதிகவினர் மிகுந்த வருத்தம் அடைந்து திரும்பினர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.