Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் மரணம்
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் மரணம்

நாட்டில் மேலும் 2 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் நேற்று பதிவாகின.

இதற்கமைய கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 588ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிபில பகுதியை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளார்.

பிபில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கொவிட்-19 நோயாளர் என அடையாளங்காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த 4ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

தீவிர சிறுநீரக பிரச்சினை, குருதி விஷமானமை மற்றும் கொவிட் நியூமோனியா நிலை இந்த மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அம்பாறை – மஹஓய பகுதியை சேர்ந்த 47 வயதான ஆண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.

இதனையடுத்து அங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார்.

கொவிட் நிமோனியா நிலை காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.