Mon, Apr19, 2021
Homeவிநோதம்நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி நிர்வாணமாக தோன்றியதால் சலசலப்பு!
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி நிர்வாணமாக தோன்றியதால் சலசலப்பு!

தென்னாப்பிரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி, ஆன்லைன் ஜூம் காலில் நிர்வாணமாக தோன்றியதால் சலசலப்பு. இந்த எதிர்பாராத சம்பவத்தால் மீட்டிங் நடந்துக்கொண்டிருந்த போதே, நிறுத்தப்பட்டது.

இதனால் சோலிலே எண்டேவ் எனும் அந்த தலைவர், மிகவும் வெட்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று துவங்கிய காலம் முதலே ஆன்லைன் மற்றும் வீடியோ கால் மூலம் மீட்டிங் செய்வது என்பது இயல்பாக மாறிவிட்டது. இந்த கூட்டங்கள் மற்றும் கருந்தரங்குகள் வேலையை செய்வதில் மக்களுக்கு உதவியாக இருக்கின்றன. அதே சமயம் ஜூம் மீட்டிங் பல தவறுகள் நடக்கவும் காரணமாக அமைகின்றன.

சமீபத்தில் ஒரு தென்னாப்பிரிக்க தலைவர் பாரளுமன்றத்தின் ஜூம் மீட்டிங்கின் போது அதில் அவரது மனைவி தற்செயலாக நிர்வாணமாக தோன்றியதை அடுத்து மிகவும் வெட்கப்பட்டார்.

சோலிலே எண்டேவ் என்பவர் தேசிய பாரம்பரிய தலைவர்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார். கடந்த மார்ச் 30 அன்று நடந்த கூட்டத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட 19 இறப்புகள் குறித்து பேசுவதற்காக தென்னாப்பிரிக்காவில் உள்ள 23 தலைவர்களுடன் ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டார்.

ஆனால், அவர் வீடியோ கால் பேசிக் கொண்டிருப்பதை அறியாத அவரது மனைவி நிர்வாணமாக அவருக்கு பின்னால் தோன்றியுள்ளார். அந்த சமயத்தில் அவர் ஈஸ்டர்ன் கேப் மருத்துவர்கள் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்பது குறித்து விளக்கி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவரது மனைவி நிர்வாணமாக தோன்றியதை கண்ட மற்றவர்கள் சிரிக்க துவங்கினர். இதை கண்ட குழுவின் தலைவரான ஃபெய்த் முத்தாம்பி என்பவர் தலையிட்டு கூட்டத்தை இடை நிறுத்தினார்.

”இன்கோசி உங்களுக்கு பின்னால் உள்ளவர்கள் சரியாக ஆடை அணியவில்லை. அனைவரும் அதை பார்த்துக்கொண்டு உள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ”தயவு செய்து நீங்கள் ஒரு கூட்டத்தில் இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொன்னீர்களா? இல்லையா? அது எங்களை மிகவும் தொந்தரவு செய்கிறது” என்று அவர் கூறினார். மேலும் ஜூம் சந்திப்பின்போது இதுப்போன்ற சம்பவம் நடப்பது இது முதல் தடவையல்ல என்று அவர் தொடர்ந்து கூறுகிறார்.

“நாங்கள் உங்களை ஆன்லைனில் சந்திக்கும்போதெல்லாம் இதை பார்க்க வேண்டி உள்ளது. முதலில் நீங்கள் டிவியில் நேரலையில் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று முத்தாம்பி மேலும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் தனது கைகளால் முகத்தை மூடிக்கொண்டு எண்டேவ் மன்னிப்பு கேட்டார். “நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். நான் கேமிராவில் கவனம் செலுத்தியதால் பின்னால் எதையும் நான் கவனிக்கவில்லை. நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த ஜூம் ஆன்லைன் வீடியோ கால் தொழில்நுட்பம் எங்களுக்கு மிகவும் புதியது. எனவே இதுக்குறித்து முழுதாக எனக்கு தெரியாது.”

இந்த மீட்டிங் இரவு 10 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என எண்டேவ் கூறினார். “இரவு 10 மணிக்கு பிறகு எனது மனைவி குளியலறையை பயன்படுத்துவதற்காக வந்தார். நான் வீடியோவில் பேசிக் கொண்டிருந்ததை அவர் அறியவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.