Sun, May9, 2021
Homeசினிமாநடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” - தமிழக அரசு அறிவிப்பு

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 59.

நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை மற்றும் சமூகச் சேவையை கௌரவிக்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.