Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுதோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி உயிரிழப்பு
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

தோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி உயிரிழப்பு

தோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீஹகாவத்த-தெல்கொட பகுதியை சேர்ந்த சிறுமியே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு தோஷம் இருப்பதாகவும் தோஷம் நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறுமியை பெண் பூசகர் ஒருவரிடம் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

பூசகரும் தோஷம் நீக்குவதாக தெரிவித்து தடி ஒன்றினால் சிறுமியை கடுமையாக தாக்கிய நிலையில் சிறுமி காயங்களுடன் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பெண் பூசகர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.