Homeசெய்திகள்கிழக்குதிருகோணமலையில் கரையொதுங்கிய பாரிய சுறா மீன் கடலில் விடப்பட்டது

திருகோணமலையில் கரையொதுங்கிய பாரிய சுறா மீன் கடலில் விடப்பட்டது

திருகோணமலை – குச்சவெளி கடற்கரையில் பாரிய சுறா மீன் ஒன்று நேற்று(14) மாலை கரையோதுங்கியது.

உயிருடன் இருந்த குறித்த சுறா மீனை அப்பகுதி மீனவர்கள் மீண்டும் கடலில் பாதுகாப்பாக விடுவித்ததாக தெரிவிக்கின்றனர்.

இது 300 கிலோகிராமுக்கும் மேற்பட்ட நிறையுடைய அந்த சுறா, நான்கு அடி நீளம் கொண்டதாக இருந்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

சீரற்ற வானிலையால் அந்த சுறா இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi