Sun, Jun20, 2021
Homeசெய்திகள்உள்நாடு'தம்மிக்க பாணியை அறிமுகப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை'

‘தம்மிக்க பாணியை அறிமுகப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை’

தம்மிக்கப் பாணியை நாட்டுக்கு அறிமுகம் செய்தவர்களுக்கு எதிராக உடனடியாகச் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புகாமி, இது தொடர்பில் குழு ஒன்றை அமைத்து, அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், தன்னுடன் நெருங்கியிருப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? இல்லையா? என்ற சந்தேகத்துடனேயே நாட்டு மக்கள் தற்போது வாழ்வதாத் தெரித்த அவர், நாட்டு மக்கள் இவ்வாறான நிலையில் இருக்க, அரசாங்கமோ சட்டியை உடைப்பதிலும், பாணியை அருந்துவதிலுமே கவனம் செலுத்தியதாகவும் அவர் கூறினார்.

சுகாதாரத்துறை அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அனைவருமே தம்மிக்க பாணியை அருந்தி விளம்பரம் செய்ததாகவும், சில அமைச்சர்கள் இந்தப் பாணியை விற்பனை செய்திவில் மும்மரமாக இருந்தனரெனவும் கூறிய அவர், கொரோனா வைரஸை இப்பாணியால் அழிக்க முடியாதென தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi