Sat, Mar6, 2021
Home தலைப்பு செய்தி தன் அம்மாவைப் பற்றி தெரியவந்த நடுங்கவைக்கும் உண்மைகள்! பயத்தில் தற்கொலைக்கு முயன்ற மகள்

இரண்டாவது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய டிடி

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல...

எப்படி இருந்த நடிகர் வடிவேலு இப்படி ஆகிட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்...

தன் அம்மாவைப் பற்றி தெரியவந்த நடுங்கவைக்கும் உண்மைகள்! பயத்தில் தற்கொலைக்கு முயன்ற மகள்

இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா? – உங்கள் விளம்பரங்களை இலவசமாக காட்சிப்படுத்த டாப் பிஸினஸ் இணையத்தளத்துக்கு இன்றே வாருங்கள். POST YOUR FREE AD

மூன்று கொலைகளை செய்த தன் அம்மாவைப் போல் தானும் மாறிவிடுவேனோ என்ற அச்சத்தில் 13 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரண்டே பெண்களில் ஒருவர் Joanna Dennehy.

ஒரு சீரியல் கில்லர் என அழைக்கப்படும் Joanna Dennehy, 2013-ஆம் ஆண்டில் 10 நாட்கள் இடைவெளியில் 3 பேரை பயங்கரமான ஜாம்பி கத்தியால் குத்தி ரசித்து ரசித்து கொடூரமாக கொலை செய்தவர்.

கொலை செய்துவிட்டு ஓவொரு சடலத்தையும் ஒவ்வொரு குழியில் வீசிச் சென்றவர். மேலும், 2 பேர் இவரிடம் கத்தியால் குத்தப்பட்டு உயிர்பிழைத்தனர்.

அச்சமயத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு அவரை பொலிஸார் கைது செய்து, 2014-ல் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நடக்கையில் Joanna-க்கு 5 வயதில் Shianne Treanor என்ற பெண் குழந்தை இருந்துள்ளார்.

இப்போது Shianne Treanorக்கு 13 வயது ஆன நிலையில், அவரது தாயைப் பற்றியும், அவர் செய்த கொடூரமான குற்றங்களையும் அறிந்து கொண்டார்.

தன் அம்மாவின் சுயரூபத்தைப் பற்றி முதல் முதலில் கேட்ட Shianne Treanor தரையில் விழுந்து கதறி அழுதுள்ளார். உண்மைகள் தெரியவந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வியாக, “நானும் அம்மாவைப் போல மாறிவிடுவேனா?” என்று தான் கேட்டுள்ளார்.

அந்த அளவிற்கு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட Shianne Treanor, சில நாட்களாக மனச்சோர்வு, பதட்டம், சித்தப்பிரமை போன்ற மனநோய்களுக்கு ஆளானார்.

ஒரு கட்டத்தில், தான் நிச்சயம் தன் அம்மாவைப் போல ஒரு சீரியல் கில்லராக மாறிவிடுவேன் என நம்ப ஆரம்பித்த அவர், யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்ற பயத்தில், இதை இப்போதே நிறுத்திவிட வேண்டும் என நினைத்து தற்கொலைக்கு முயற்சிசெய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், அவருக்கு இப்போது மனநல மருத்துவர்கள் மூலம் முறையான கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK