Sun, May9, 2021
Homeசினிமாதனுஷ் – மாரி செல்வராஜ் காம்போவில் ‘கர்ணன்’… எகிற வைத்த டீசர்!

தனுஷ் – மாரி செல்வராஜ் காம்போவில் ‘கர்ணன்’… எகிற வைத்த டீசர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிக்கும் ‘கர்ணன்’ என்ற படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி கொண்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே கதிரை வைத்து ‘பரியேறும் பெருமாள்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர்.

சமீபத்தில், இப்படத்தின் ‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘பண்டாரத்தி புராணம்’ மற்றும் ‘தட்டான் தட்டான்’ ஆகிய மூன்று பாடல்களை ரிலீஸ் செய்தனர். இம்மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களின் ப்ளேலிஸ்டிலும் இடம்பிடித்துள்ளது.

தற்போது, இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசரை தனுஷ் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஏப்ரல் 9-ஆம் திகதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

 

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi