தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு 234 தொகுதிகளில் 88,937 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார்.
தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தார்.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.