Mon, Apr19, 2021
Homeமுக்கிய செய்திகள்சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்குக் கப்பல் 6 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்பு
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்குக் கப்பல் 6 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்பு

எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்ற EverGiven சரக்குக் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டது.

சரக்கு போக்குவரத்து கடல்வழிப் பாதையில் உலகின் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் எகிப்தின் சூயஸ் கால்வாயில் கடந்த 23ம் திகதி ஜப்பான் நாட்டை சேர்ந்த ராட்சத சரக்கு கப்பல் தரை தட்டி நின்றது. இதனால், கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது.

இந்த கப்பலை மீட்க, 7வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடந்தன. ஏற்கனவே, கப்பல் தரை தட்டிய இடத்தில் இருந்து 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டது.

14 இழுவை கப்பல்கள் கொண்டு கப்பலை நகர்த்தும் முயற்சிகள் நடந்தன. இப்பணிகளின் மூலமாக கப்பல் 30 டிகிரி கோணத்தில் லேசாக நகர்ந்தது. கப்பலை மீட்கும் பணிக்காக நேற்று மேலும் 2 பிரமாண்ட இழுவை படகுகள் சூயஸ் நோக்கி வரவழைக்கப்பட்டு, கப்பலை இழுக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில் சற்று முன் எவர் கிரீன் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல் வந்த நிலையில், EverGiven சரக்குக் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக மீட்புக் குழு தெரிவித்தது.

இந்த நிலையில், சூயஸ் கால்வாயில் தரை தட்டிய சரக்கு கப்பல் மிதக்கவில்லை என கப்பல் உரிமையாளர் தகவல் அளித்துள்ளார். கப்பல் திரும்பியுள்ளதே தவிர மிதக்கவில்லை என்றும் கப்பல் உரிமையாளர் கூறியுள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.