Sun, Jun20, 2021
Homeசெய்திகள்கிழக்குசுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகர்களுக்கான இடமாற்றம் இரத்து

சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகர்களுக்கான இடமாற்றம் இரத்து

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள், கிழக்கு மாகாண இணையத்தளமான EP.gov.lk இல் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதுடன், மேன்முறையீட்டுக்கான விண்ணப்பப் படிவமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொவிட் -19  சூழ்நிலை காரணமாக, கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த முடியாது போயிருந்த நிலையில், இம்முறை 2021ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்காலிகமாக இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi