மடுல்சீமையிலுள்ள சிறிய உலக முடிவை பார்வையிடச் சென்று காணாமற்போன சிரச தொலைக்காட்சியின் 3D அனிமேஷன் தயாரிப்பாளரான தினுர விஜேசுந்தர சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் விசேட படையணியினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறிய உலக முடிவின் பள்ளத்தில் இன்று அதிகாலை தொடக்கம் தேடுதல் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
கற்பாறைக்குள் சிக்குண்டிருந்த நிலையில், தினுர விஜேசுந்தரவின் சடலம் மீட்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன குறிப்பிட்டார்.
ஆறு வைத்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் கடந்த 6 ஆம் திகதி உலக முடிவை பார்வையிடச் சென்றிருந்த போதே தினுர விஜேசுந்தர காணாமல் போயிருந்தார்.