Sun, Jun20, 2021
Homeசெய்திகள்உள்நாடுகொழும்பில் புதிதாக 47 பொலிஸ் நிலையங்கள்

கொழும்பில் புதிதாக 47 பொலிஸ் நிலையங்கள்

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் புதிதாக 47 பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருக்கின்றபோதிலும், கொரோனா வைரஸ் நிலைமைகளால் அவற்றைத் திறப்பது காலந்தாழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் மொத்தமாக 494 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றபோதிலும், மேலதிகமாக புதிதாக 197 பொலிஸ் நிலையங்களை ஸ்தாபிப்பதற்கான தேவை காணப்படுகிறது.

“நாட்டில் ஏற்பட்டுள்ளக் கொரோனா வைரஸ் நிமைகளைக் கருத்திற்கொண்டு புதிய பொலிஸ் நிலையத் திறப்புவிழா 10 நாள்கள் வரையில் காலந்தாழ்த்தப்பட்டுள்ளது.

“இதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் 47 பொலிஸ் நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்புதியப் பொலிஸ் நிலையங்களுக்குத் தேவையானக் கட்டம், உபகரணங்கள், வாகனங்கள் என அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

“ஏனைய 150 பொலிஸ் நிலையங்களை எதிர்காலத்தில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi