Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுகொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்!
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்!

கொழும்பில் கொலைசெய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட யுவதி குறித்து மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவரின் கொலையுடன் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் புத்தல பொலிஸ் நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டரான முதியன்சலாகே பிரேமசிறி (52 வயது) என்பவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டார். இந்த நிலையிலேயே ஒவ்வொன்றாக இதுகுறித்த தகவல்கள் கசிகின்றன.

இரத்தினபுரி குருவிட்ட பகுதியைச் சேர்ந்த பகுதியை சேர்ந்த திலினி யெயேன்ஷா ஜயசூரிய என்ற 30 வயதான குறித்த யுவதிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்துள்ளது.

குறித்த சப் இன்ஸ்பெக்டர் இரத்தினபுரி எம்.பி. ஒருவரின் மெய்ப்பாதுகாவலராக பணிபுரிந்த சமயம் இந்த காதல் மலர்ந்துள்ளதுடன் கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

கழுத்தறுத்து கொல்லப்பட்ட குருவிட்ட யுவதி கர்ப்பம் தரித்ததனால் இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கலாமெனவும் இதன் காரணமாக இந்த கொலை அரங்கேறியிருக்கலாம் எனவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹங்வெல்ல பகுதிக்கு மேற்படி யுவதியுடன் விடுமுறையில் வந்த குறித்த இன்ஸ்பெக்டர் அங்கு அறை ஒன்றை எடுத்து தங்கியுள்ளதுடன் மறுநாள் காலை வரை இவர்கள் இருவரும் மூன்று தடவைகள் வெளியே சென்று வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு பயணப்பெட்டியுடன் தனியொருவராக வெளியே வந்த இன்ஸ்பெக்டர் ஹோட்டலுக்குரிய கட்டணமான 4100 ரூபாவை செலுத்தி வெளியேறியுள்ளார்.

அதன்பின்னர் முச்சக்கரவண்டியில் பிரதான பஸ் நிலையத்திற்கு வந்து, கொழும்பு நோக்கிச் செல்லும் பஸ்ஸில் ஏறி பின்னர் குணசிங்கபுரவில் இறங்கி பயணப்பெட்டியை டாம் வீதியில் வைத்துவிட்டு தலைமறைவானார்.

பொலிஸ் விசாரணைகளை திசைதிருப்பவே அவர் இந்த சடலத்தை டாம் வீதிக்கு கொண்டுவந்திருக்கக் கூடுமென்றும் ஆனால், சி.சி.ரி.வி. கெமராக்களிடம் சிக்கியதால் அவரால் தப்ப முடியாமல் போய்விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை டாம் வீதியில், யுவதியின் சடலத்தை அடையாளம் காண அவரின் சகோதரர் நேற்று வந்திருந்தார்.

இந்த காதல் குறித்து கேள்விப்பட்டு அதுகுறித்து தங்கையிடம் கேட்டதாகவும், அப்படியொன்றே நடக்கவில்லையென தங்கை தன்னிடம் கூறியதாகவும் அந்த சகோதரர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

ஆனாலும் தனது தங்கை சிவனொளிபாதமலைக்கு செல்வதாக கூறியே வீட்டைவிட்டுப் புறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே கொலை செய்தமையை இலகுவில் கண்டுபிடிக்கும் எந்த தகவலையும் குறித்த சப் இன்ஸ்பெக்டர் ஹோட்டலில் விட்டுவைக்கவில்லையென தெரிவித்த பொலிஸார் ஹங்வெல்லயில் கூரிய கத்தி ஒன்றையும், பயணப்பையையும் இன்ஸ்பெக்டர் வாங்கும் காட்சிகள் சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளனர்.

கொழும்பு டாம் வீதியில் சடலமிருந்த பயணப்பையை வைக்கும்போது இவரது முதுகில் மற்றொரு பையும் இருந்துள்ளது.

அந்த பையில்தான் யுவதியின் தலை இருந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அந்த பையை தேடும் பணிகள் தற்பொழுது வேகமாக இடம்பெற்றுவருகின்றன.

இதேவேளை படல்கும்புர, வெஹெரகொட பகுதியிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அந்த சப் இன்ஸ்பெக்டரின் உடல் மீட்கப்பட்டது.

அவரது மரண விசாரணைகள் நேற்று மொனராகலை மாவட்ட நீதிபதி சச்சினி அமரவிக்கிரம முன்னிலையில் இடம்பெற்றன. தனது தற்கொலை குறித்து சட்டபூர்வமான தனது மனைவிக்கு சப் இன்ஸ்பெக்டர் கடிதமொன்றையும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உருக்கமான விடயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொலை செய்யப்பட்ட குறித்த யுவதி பல்வேறுபட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்ததுடன் கடந்த தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து பிரசார செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.