Sun, Jun20, 2021
Homeசெய்திகள்உள்நாடுகொரோனா ஒழிப்புக்காக 9 மாகாணங்களுக்கும் 9 நியமனங்கள்

கொரோனா ஒழிப்புக்காக 9 மாகாணங்களுக்கும் 9 நியமனங்கள்

கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக, ஒன்பது மாகாணங்களுக்கும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகங்கள் ஒன்பது பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சகல மாகாணங்களிலும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்கும் வகையிலேயே  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 105 கொவிட் சிகிச்சை  நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன. அதில், 19,000 இற்கு அதிகமான கட்டில் வசதிகளும் உள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi