Sun, Jun20, 2021
Homeசெய்திகள்உள்நாடுகொரோனா அச்சத்தால் கூரை மீது ஏறிய கைதிகள்

கொரோனா அச்சத்தால் கூரை மீது ஏறிய கைதிகள்

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர், சிறைச்சாலை கூரை மீது ஏறி, எதிர்ப்பு நடவடிக்கையை இன்று (09) முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக கோரிக்கைகள் சிலவற்றை  முன்வைத்தே, அவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில்  கைதிகளுக்கு முன்னெடுக்கப்படும் அன்டிஜன் பரிசோதனையின் அறிக்கை கிடைக்கும் வரை, அவர்களை தனியாக தடுத்து வைக்குமாறும் விரைவாக பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு கோரியே, கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi