Sun, Jun20, 2021
Homeஇந்தியாகொரோனாவை காரணம் காட்டி பிரித்து விடுவார்களோ.... பயத்தில் தம்பதியர் தற்கொலை!

கொரோனாவை காரணம் காட்டி பிரித்து விடுவார்களோ…. பயத்தில் தம்பதியர் தற்கொலை!

கொரோனா பரிசோதனை செய்து தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தால் வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல், வேல் நகர், 1வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (70) மற்றும் இவரது மனைவி அஞ்சலாட்சி (60). இவர்களுக்கு திருமணமாகி பிள்ளைகள் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இவரது உறவினர் இவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
ஜன்னல் வழியாக பார்த்தபோது சமையல் அறையில் இரண்டு பேரும் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்து கிடந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த மூன்று தினங்களாக அஞ்சலைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து விட்டு வந்துள்ளனர்.

தங்களுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்திலும் கொரோனா பரிசோதனை செய்தால் மனைவியை தனியாக பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi